VAT வரி விலக்கு பட்டியலில் இருந்து கையடக்க தொலைபேசிகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி 1, 2024 முதல் VAT 15% முதல் 18% ஆக ஒரே நேரத்தில் அதிகரிக்கப்படுவதால், மொபைல் போன் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகள் ஆபத்தில் இருக்கும் என்று மொபைல் போன்கள் மற்றும் பாகங்கள் இறக்குமதி யாளர்கள் தெரிவிக்கின்றனர்.