பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சாதனையாளர்கள் கௌரவிப்பு


(கமலி)

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் பல்வேறு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களையும் சாதாரணதரப் பரீட்சையில் 9ஏ சித்திபெற்ற

மாணவர்களையும் தேசிய மட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் ரி.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாகர் கு.சுகுணன் நீர்பாசன திணைக்கள கே.செந்தூரன்,சட்டத்தரணி ஆர்.றமணா,சட்டத்தரணி மு.கிருபாகரன் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உறுப்பினர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள்மற்றும் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

இதன் போது மாணவர்களுக்கு வெற்றி பதக்கம் சான்றிதழ்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மாணவர்கள் பல்திறமைசார்ந்த கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.