இணைந்த கரங்கள் அமைப்பினால் பழைய அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டவளத்தாப்பிட்டி தமிழ் கலவன் பாடசாலை மற்றும் புதிய வளத்தாப்பிட்டி ஸ்ரீ நாவலர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளில் உள்ள அதி கஸ்ர குடும்பங்களான 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி வைக்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் க.கணேஸ் அவர்கள் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
இன் நிகழ்விற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், சி. காந்தன், ஆகியோரும் பழைய வளத்தாபிட்டி பாடசாலையின் அதிபர் திருமதி. பு. புஸ்பராணி மற்றும் இலங்கை விரிட்டிஸ் ஆங்கில கல்லூரி பணிப்பாளர் வினோகாந், பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவர் காந்தன்,பாடசாலை ஆசிரியர்களான திருமதி. ஏ. கௌசள்லியா, திருமதி. N. திவியோகராஜா, திருமதி. மு. நிலுஜா ஆகியோர், மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.