நட்டஈடு கிடைக்கப்பெறாத விவசாயிகள் முறையீடு செய்யலாம்: விவசாய அமைச்சர்
வறட்சியினால் பாதிக்கப்பட்டு நட்டஈடு கிடைக்கப்பெறாத விவசாயிகள் இருந்தால், மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை பரிசீலித்து, குறித்த விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டோருக்கான மானியங்களை உரிய முறையில் வழங்குவதே தமது எதிர்பார்ப்பு என அவர் கூறினார்.
இதற்கான நிதியை நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.