மட்டக்களப்பு Leo கழகத்தின் வாணிவிழா

மட்டக்களப்பு Leo கழகத்தினரால் 22/10/2023 அன்று வாணிவிழாவை முன்னிட்டு மாலை லயன்ஸ் நிலையத்தில் பூஜை மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன்போது Batti leos உடன் Leo club of vincentites, Leo club of cecilians, Leo club of Michaellites ஆகிய பாடசாலை கழகங்களும் இணைந்து கொண்டன. அதிதிகளாக திரு.டேவிட், திரு.செல்வேந்திரன், திரு.தவராஜா குணராஜா, திரு. பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தற்கால சந்ததியினருக்கு சமய நம்பிக்கைகளை ஊட்டும் விதமாகவும் கல்வி,செல்வம்,வீரம் ஆகியவற்றை வழங்கும் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை நினைவுகூரும் முகமாகவும் நடாத்தப்பட்ட இந்நிகழ்வானது பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு மங்கள விளக்கேற்றல், அதிதி உரைகள், ஆடல் பாடல் போன்ற கண்ணைக் கவரும் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டு இறுதியில் project chairman sathurshan அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டு இனிதே நிறைவுற்றது .