சாணக்கியன் அரசியல் கோமாளி –சொல்லுகின்றார் கொழும்பு ரவிக்குமார்


வடகிழக்கில் ஹர்த்தால்கள் செய்வதனால் எதனையும் மாற்றமுடியாது.இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் தேசிய கட்சிகள் தமது இருப்பினை தக்கவைப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் எனவும் இது தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்துசெயற்படவேண்டும் எனவும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மக்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும்போது எந்த விமர்சனமும் கிடைக்கப்போவதில்லையெனவும் நாளைய தினம் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வர்த்தக நிலையங்களுக்கு வருமானவரித்துறை சென்று அவர்கள் அரசாங்கத்திற்கு சரியான முறையில் வரி செலுத்துகின்றார்களா என்று விசாரணைசெய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்குள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வினை வழங்குவார் எனவும் அதனை வைத்து அரசியல் செய்பவர்களை மக்கள் ஓரங்கட்டவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

சாணக்கியன் போன்ற கோமாளிகள் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே இனவாத முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.