மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் 78வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்றைய தினம் மாபெரும் நடைபவனி நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் நல்லையா மாஸ்டர் அவர்களினால் உருவாக்கப்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயமானது மட்டக்களப்பு நகரில் பிரதானமான ஆரம்ப பிரிவு பாடசாலையாகயிருந்துவருகின்றது.
இந்த பாடசாலையின் 78வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் இன்றைய தினம் பாடசாலையிலிருந்து மாபெரும் நடைபவனி நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் த.அருமைத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,மாணவர்கள்,பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இந்த பாதயாத்திரையானது இயற்கையினை பாதுகாப்போம் என்னும் வகையில் நடைபெற்றது.
பாதயாத்திரையானது புகையிரத வீதி,பார்வீதி,திருமலை வீதியுடாக வந்து மீண்டும் புகையிரத நிலைய வீதியுடாக பாடசாலையினை வந்ததது.
மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் தாங்கியதாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனியில் மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக கலந்துகொண்டனர்.