கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் இல்லையேல் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர புதன்கிழமை (13) ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அறிவுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் பாவனையில் இருந்தும் கலாசார சீர்கேடுகளில் இருந்தும் மாணவர்களை பாதுகாத்து, நெறிப்படுத்தும் பொருட்டு ஜம்மியத்துல் உலமா சபை உள்ளிட்ட பொது அமைப்புகளின் வேண்டுகோளின் பேரில் பொருத்தமற்ற நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீடுகளில் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களினால் நடத்தப்படும் ஆரம்பக் கல்வி மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கும் இவ்வறிவுறுத்தல் பொருத்தமானது என்று கல்முனை மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.