1550 மில்லியன் ரூபா வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (08) பயனாளிகளின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நலன்புரி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஜூலை மாதம் 790000 பயனாளிகளுக்கு பணம் செலுத்தப்பட்டது.
இதன்படி ஜூலை மாதத்தில் பயனடைந்த மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை1,048,170 என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கணக்குகளை சரிபார்த்த பின்னர், ஏனைய பயனாளிகளுக்கு பணம் செலுத்த நலன்புரி சபை ஆயத்தமாகி வரும் நிலையில், ஜூலை மாத கொடுப்பனவு இவ்வாறு செலுத்திய பின்னர், அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவை செலுத்த வாய்ப்புள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.