அக்கரைப்பற்றில் ஒரே பாடசாலையில் ஐந்து பேருக்கு குரு பிரதீபா விருது


சிறந்த ஆசிரியர்களுக்கு அவர்களது சேவையினை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் குருபிரதிபா விருது இவ் வருடம் வழங்கப்பட்டபோது அக்கரைப்பற்று இராமகிருஷ்ண தேசிய பாடசாலையின்  ஐவருக்கு இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையை சேர்ந்த ஐவருக்கு குரு பிரதீபா விருதினை செவ்வாய்க்கிழமை கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் மதிப்பிற்குரிய அகிலா கனகசூரியம்  அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

இதன்படி பாடசாலையின் அதிபர் JR.டேவிட் அமிர்தலிங்கம் அவர்களுக்கு சிறந்த பாசாலை தலைமைத்துவத்திற்காகவும் பிரதி அதிபர் .ஜயந்தன் அவர்களுக்கு பாடவிதானத்திற்காகவும் பிரதி அதிபர் C.மதியழகன் அவர்களுக்கு நிர்வாகத்திற்காகவும் திருமதி.நீரஜா அகிலன் அவர்களுக்கு பாடசாலை ஒழுக்காற்று மற்றும் ,சமுகத் தொடர்புக்காகவும் திருமதி.M.ஜீவிதா அவர்களுக்கு பாடசாலை மாணவர் தலைமைத்துவ திறன் விருத்திக்காகவும் தமது பொறுப்புகளை சிறப்பாக மேற்கொண்டமைக்கு மேற்படி விருது வழங்கப்பட்டது.