செங்கலடி மத்திய கல்லூரியின் 2011 சா.த 2014 உயர்தர பழைய மாணவர்களின் முயற்சியில் பாடசாலைக்கான "Smart class Room" கையளிப்பு


 (Batti  correspondent - suba)

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியின் Smart class Room புனர் நிர்மாணம் செய்யப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. 

2011 சா.த 2014ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பிலும் முயற்சியிலும் இச் செயற்றிட்டமானது சுமார் ஒரு மாத கால இடைவெளியினுள் சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான நிதியில் புனர்நிர்மாணம் செய்ப்பட்டு இன்று பாடசாலைக்கு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.

 இவ் வேலைத்திட்டமானது பூரனமாக நிறைவு செய்யப்பட்டு இன்று காலை பாடசாலையில் பிரதி அதிபர் திருமதி.மேகனதாஸ் தேவி அவர்களின் தலைமையின் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் ஒன்றிய நிர்வாகத்தினர் ஆகியோரின் பங்கேட்புடன் இன்றைய இந் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , புனர் நிர்மாணம் செய்ப்பட்ட புதிய Smart class Room திறந்து வைக்கப்பட்டது .

நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் , மௌன இறை வணக்கம் என்பன முறையே இடம்பெற்றதுடன் , இச் செயற்றிட்டம் தொடர்பான விளக்கங்களும் தெளிவிபடுத்தப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகத்தினர் , மாணவர் சங்க நிர்வாகத்தினர் இம் மாணவர்களின் இச் செயற்பாட்டினை வாழ்த்தி பாராட்டினர். 

மேலும் குறிப்பாக செங்கலடி மத்திய கல்லூரியின் 149 வது ஆண்டு நிறைவையோட்டி பாடசாலையின் பழைய மாணவர்களினால் பாடசாலைக்கு பல்வேறுபட்ட பாடசாலைக்கான நலன் வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.