கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
எனினும், பெறுபேறுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
எனவே, இவ்வாறான போலி செய்திகளைப் பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜயசுந்தர கூறியுள்ளார்.