மட்டக்களப்பு E.M.S வைத்தியசாலையில் நீரழிவு நல்வாழ்வு மையம் திறப்பு விழா!


(ஆர்.நிரோசன்)
மட்டக்களப்பு E.M.S வைத்தியசாலையில் நீரழிவு நல்வாழ்வு மையம் திறப்பு விழாவும் தெரிவு செய்யப்பட்ட 50க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக நோய்களுக்கான பரிசோதனைகளும் நேற்று (17) காலை 10:30 மணியளவில் E.M.S வைத்தியசாலையில் இடம் பெற்றது.

நோயாளிகளுக்கான கண் பரிசீலனை, குருதி பரிசோதனை,சிறுநீரகப் பரிசோதனை, நீரழிவு கால் பரிசோதனை, நரம்பியல் பரிசோதனை, இருதயவியல் பரிசோதனை, ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனைகளும் மற்றும் வைத்திய ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தது.