காலி பக்டீரியா கொழும்புக்கு வந்தது

காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை பலிகொண்ட 'மெனிங்கோகோகல்' எனும் பக்டீரியா தொற்றுக்குள்ளான நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நோயாளி ஜால பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் அவர் இரத்மலானை சுகாதார வைத்திய பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் காய்ச்சல் காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் பணிப்புரியும் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.