தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு!!


இன்று (15) தங்கத்தின் விலை நேற்றுடன் (14) ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாயாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 172,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 40 ரூபாயினால் அதிகரித்து 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 100 ரூபாய் அதிகரித்து 158,650 ரூபாயாக பதிவாகியுள்ளது.

முழு விபரம்

தங்க அலகு
தங்க விலை
24 கரட் 1 கிராம் ரூ.21,630
24 கரட் 8 கிராம் ரூ.173,000
22 கரட் 1 கிராம் ரூ.19,830
22 கரட் 8 கிராம் ரூ.158,650
21 கரட் 1 கிராம் ரூ.18,930
21 கரட் 8 கிராம் ரூ.151,450