மதுபான நிறுவனங்களுக்கு கால அவகாசம்!!


வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சுமார் 600 மில்லியன் ரூபாவை மதுபான நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு வரியாக செலுத்த வேண்டும் என்றார்.

கலால் துறை அனைத்து நிறுவனங்களையும் அழைத்து, வரி செலுத்த இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளதுடன், வரி செலுத்திய சுமார் பத்து நிறுவனங்கள் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்தார் .

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வரி செலுத்தப்படாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது கலால் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.