எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்!!


இன்று(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய,

ஒரு லீட்டர் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 348 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் 95 ரக பெட்ரோலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் டீசலின் விலை 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 226 ரூபாவாகும்.