மதுபானங்களின் விலை அதிகரிப்பு!!


11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட வற் வரி திருத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி மூலம் இந்த வரிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, இந்த வரித் திருத்தத்தின் மூலம் 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினாலும், பீர் வகைகளின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.