யூரியா உரத்தின் விலை மேலும் குறையும் சாத்தியம்!!


யூரியா உர மூடையின் விலை மேலும் குறையலாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், அடுத்த கப்பல் இறக்குமதியின் போது யூரியா உர மூடையின் விலை 9000 ரூபாவுக்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மற்றும் பல காரணிகளே இந்த விலை குறைப்புக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.