(மட்டக்களப்பு நிருபர்)
அன்மையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிறவு இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உடம்பில் மிக மோசமான தடஅடி தளும்புக் காயங்களுடன் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் வைத்து இவர் சரமாறியாக தாக்கப்பட்டுள்ளதுடன் , இவருக்கான சிகிச்சை சிறைச்சாலை பாதுகாவலர்களின் பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் இடம்பெற்று வருகிறது.
சிறைச்சாலையில் ஏன் இவர் தாக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் விசாரனைகளைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவருக்கான சிகிச்சை முடிவுறும் வரை வைத்தியசாலையில் தங்கியிருப்பார் எனவும் வைத்தியசாலைப்ப பணிப்பாளர் கே.கலாரஞ்சினி தெரிவித்தார்.