பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலித்து மேலதிக வகுப்புக்களை நடத்துவதைத் தடைசெய்து மத்திய மாகாண ஆளுநரின் பணிப்புரையின் பேரில் மத்திய மாகாண கல்விச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
குறித்த சுற்றறிக்கையை மீறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் தம்மிடம் கற்கும் பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாணத்தில் நியாயமான பாடசாலைக் கல்வியை நிலைநாட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல நோக்கத்துடன் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் பணம் வசூலிக்காமல் கூடுதல் வகுப்புகளில் கற்பிக்க எந்த தடையும் இல்லை என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
