கதிர்காமத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்!!


கதிர்காமத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ரிக்டர் அளவுகோலில் 2.1 மெக்னிடியூட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நில அதிர்வினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.