திருகோணமலை குச்சவெளியில் டைனமைட் சிக்கியது!!


திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி- ஜயா நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டைனமைட்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம்(22) பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சட்டவிரோத வெடிபொருட்கள் கைபெற்றப்பட்டுள்ளன. 

குறித்த சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.