இலங்கையில் அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பான மற்றும் நேர்மறையான இணையவழி சூழலை உருவாக்குவதில் மெட்டா கவனம் செலுத்துகிறது.
குறிப்பாக பதின்ம வயது பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்க மெட்டா மேலதிக நடவடிக்கைகளை எடுத்துள்ளது
அதன்படி, பயனர்கள் இப்போது தங்கள் நேரத்தை நிர்வகிக்கலாம், தேவையற்ற தொடர்புகளைத் தடுக்கலாம் மற்றும் அவர்கள் சந்திக்கும் உள்ளடக்கம் மற்றும் கணக்குகளின் வகையைத் தீர்மானிக்கலாம்.
அத்துடன், மெட்டாவின் கொள்கைகளில் இயல்பு நிலை, தனியுரிமை அமைப்புகள், வரையறுக்கப்பட்ட தகவல் பகிர்வு, நண்பர் கோரிக்கை, நினைவூட்டல்கள் மற்றும் இருப்பிடப் பகிர்வு விழிப்புணர்வு ஆகியவை அடங்கும்.
மேலும் இளைஞர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு தகவல் அளிக்க, மெட்டா விரிவான திட்டங்களையும் நிறுவியுள்ளது.
