வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கொலை- இருவர் கைது!!


அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாதவச்சி பிரதேசத்தைச் 27 வயது கணவனும், 23 வயதான அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் தொடர்பாக மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மோதலொன்றின்போது பலத்த காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி இளைஞர் கடந்த 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.