தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!


டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த மூன்று வாரங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நேற்றைய தினம் (23) தங்க அவுன்ஸின் விலை 601,435 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,220 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 169,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 155,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,460 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,570 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 148,550 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.