மட்டக்களப்பு- வாழக்காலை உதைபந்தாட்ட சம்பியனாக முதலைக்குடா மகுடம் சூடியது!!


படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் மட்டக்களப்பு- வாழைக்காலை சிவசக்தி விளையாட்டுக் கழகம் தனது 4வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய அணிக்கு 07பேர் கொண்ட விலகல் முறையிலான மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வெள்ளி கிழமை(26) சனிக்கிழமை(27) மற்றும் இன்று(28) ஆகிய நாட்களில் நடைபெற்றது.

குறித்த போட்டியின் அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளான முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகமும் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகமும் இறுதி போட்டியில் இன்று மோதியது.

இதில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகமானது வெற்றி பெற்று இவ்வருடத்திற்கான சம்பியனாக முடிசூடியது. 

இப்போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடி முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற அணியினருக்கு வெற்றிக் கிண்ணமும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.