கம்பளையில் 22 வயதுடைய யுவதி ஒருவர், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பளை வெலிகல்ல பிரதேசத்தில் வசிக்கும் பாத்திமா முனவ்வரா என்ற குறித்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அவர், பிரதேசத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பள்ளிவாசலில் இருந்து பெறப்பட்ட சி.சி.ரி.வி காட்சிகளின்படி, வெலிகல்ல நகரை நோக்கி சென்ற பின்னர் அவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
