வெலிமடை பொலிஸ் பிரிவில், வெலிமடை நகரில் ஓ.எம்.சி. சந்தியில் (நேற்று 14) உள்ள ஆடையகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதன்படி உடனடியாக செயற்பட்ட வெலிமடை பொலிஸ் நிலைய அதிகாரிகளும், பிரதேசவாசிகளும் இணைந்து நடக்கவிருந்த பெரும் சேதத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயினால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை மற்றும் சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.