அரச அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க நிதி வழங்கப்படவில்லை!!


உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை அச்சிடும் பணியில் ஈடுபட்ட அரச அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக திறைசேரியிலிருந்து 54 மில்லியன் ரூபா வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அச்சுப் பணியில் ஈடுபட்டிருந்த, 200க்கும் மேற்பட்ட அரச அச்சக ஊழியர்கள், கொடுப்பனவுகளின்றி கடும் சிரமத்தில் உள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அரச அச்சகர் லியனகேவை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் “திறைசேரிக்கு அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அனைத்து அச்சு நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச அச்சகம் அண்மையில் தீர்மானித்தது. அத்துடன், உள்ளூராட்சிமன்ற தேர்தலும் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.