பெரிய கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள ஆலயத்துக்கு சொந்தமான காணியை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன



மட்டக்களப்பு,பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள ஆலய காணி பகுதியை சீர்செய்யும் பணிகள் இன்று பெரியகல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் முன்னெடுத்தது.

விநாயகர் வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆட்டோ சங்கம் ஆட்டோ தரிப்பிடமாகவும் பொதுமக்களின் பல் தேவை களுக்காவும் பயன்படுத்துவதும். ஆலயத்தில் இடம் பெறும் சூரன் போர் மற்றும் திருவிழா காலங்களில் வேட்டை திருவிழா மற்றும் வசந்த உற்சவம் என்பன இப்பகுதில் இடம்பெறுவது வழமை 

தற்போது ஏற்பட்ட வானிலை மாற்றம் மற்றும் மழை காலங்களில் மாணவர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கியதுடன் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் கவனம் செலுத்திய பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் குறித்த பகுதியை தூய்மைப்படுத்தி அவற்றினை செப்பனிடும் பணிகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த பகுதியில் நீர் தேங்கி நிற்பதால் ஆலயத்திற்கு வருகைதரும் மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்த நிலையிலும் மாணவர்களின் நன்மை கருதியும் குறித்த பணியை செப்பனிடும் பணிகளை ஆலயம் முன்னெடுத்துள்ளது.

மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும்போது ஆலயங்கள் இவ்வாறான பொதுச்சேவைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.