தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருக்கு எதிராக மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரங்கள்

 


மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இன்று "சுரண்டப்பட்ட பணம் " என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் அவர்களின் படத்தை பிரசுரித்து இத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

அத் துண்டுப்பிரசுரத்தில் - 

தர்ம லிங்கம் சுரேஸ் ஒரு மஹா திருடன் 

அந்த பணத்தை மாவீரர்களின் குடும்பத்தினருக்கு திரும்பி கொடுத்து விடு. 

"அண்ணன் சங்கபிள்ளை அவர்களே நீங்களே வீரர்களுக்கு முன்மாதிரி"

என்றும் அச்சிடப்பட்டுள்ளது.