வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினை புனரமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாடசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆலோசனை கூட்டத்தில் பழைய மாணவரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருமான வி.பபாகரன் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர் மதியழகன் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அகிலன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாரை மாவட்டத்திற்கான பொறியியலாளரும் பாடசாலை பழைய மாணவர் சங்க உபதலைவருமான என்.லோகிஸ் இராணுவ கப்டனும் பழைய மாணவர் சங்க செயலாளருமான க.ஜனார்த்தனன் உள்ளிட்ட பழைய மாணவர்கள் சங்க நிருவாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிபர் உரையாற்றுகையில் பாடசாலையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் தான் அதிபராக கடமையேற்றதன் பின்னர் இடம்பெற்றுள்ள கல்வி மற்றும் பௌதீக வள அபிவிருத்தி தொடர்பிலும் குறிப்பிட்டார்.
அத்தோடு பழைய மாணவர் சங்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் சங்கத்தை புனரமைத்து வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் இங்கு உரையாற்றிய பழைய மாணவ சங்கத்தின் உபதலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கி அதனூடாக முன்னெடுத்த பணிகள் தொடர்பில் கூறினர். அத்தோடு புதிய நிருவாகம் ஒன்றினை தெரிவு செய்ய தாம் விரும்புவதாகவும் கூறினர்.
இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர் பழைய மாணவ சங்கத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் இதற்காக சிறந்த நிருவாக கட்டமைப்பை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். இதற்கு சிறந்த உதாரணமாக பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழுவின் செயற்பாடுகளை குறிப்பிட முடியும் எனவும் அங்கு வைத்தியராக கடமையேற்று அபிவிருத்தி குழுவின் பொருளாளராக செயற்படும் பாடசாலையின் பழைய மாணவி வைத்தியர் குணாளினியின் அர்ப்பணிப்புமிகு செயற்பாடுகள் தொடர்பாகவும் குறிப்பிட்டார்.
மேலும் ஒழுக்கமுள்ள கல்வி அபிவிருத்தியில் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் இதற்கு தடையாக உருவாகும் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
இதன் அடிப்படையில் புதிய நிருவாக கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.