இன்று (29) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பகலில் 01 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், டி, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, மற்றும் டபிள்யூ மண்டலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
CC மண்டலங்களில் - காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 02 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள், MNOXYZ மண்டலங்களில்
காலை 5.30 முதல் 8.00 மணி வரை 02 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
