தேசிய எரிபொருள் அனுமதி (QR) முறையை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்த தரப்பினரை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று சந்தித்துள்ளார்.
ICTA, Dialog மற்றும் Millennium IT நிறுவனங்கள் QR முறையை உருவாக்கி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிற்கு இலவசமாக வழங்கியுள்ளன.
இன்று அந்த நிறுவனங்களுடன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த மூன்று நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் மற்றும் இதை நடைமுறைப்படுத்த முன்வந்த அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது பேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளார்