எரிபொருள் விலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!!


எரிபொருள் விலைகள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் சுங்க அதிகார சபை முன்வைத்த தரவுகளுக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க வரி உட்பட அனைத்து வகையான எரிபொருட்களையும் 300 ரூபாவுக்கும் குறைவாக வழங்க முடியும் என்ற போதிலும், மண்ணெண்ணெய் தவிர்ந்த ஏனைய எரிபொருள் வகைகளை 470 ரூபாவிற்கு விற்பனை செய்வதன் மூலம் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டி வருவதாக சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் கணக்காய்வாளர் நாயகம் இது தொடர்பில் கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் பொதுமக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை ஒழுங்குபடுத்துவதற்கும் உண்மையான விலைத் தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்கும் சுயாதீன ஒழுங்குமுறை நிறுவனமொன்றை நியமிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.