(ரஞ்சன்)
பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அவர்களின் 2022ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.துலன்சனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப் பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி ,பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் இணைப்பு செயலாளரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருமாகிய இ. வேணுராஜ், போரதீவுப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் மதிஒளி விளையாட்டுக்கழகம் மற்றும் காந்திபுரம் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றுக்கு விளையாட்டு உபகரணங்களும் 35ம் கிராமம் கண்ணபுரம் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான கதிரைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போரதீவுப்பற்று பிரதேசசபை வட்டார உறுப்பினர் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.