O/L பரீட்சைகள் இன்று ஆரம்பம்!!


நாடுபூராகவும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகள் இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன.

குறித்த பரீட்சைகள் இன்று (23) முதல் ஜூன் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய பரீட்சைகள் 5 மாதங்கள் காலம் தாழ்த்தப்பட்டு இன்று முதல் இடம்பெறவுள்ளன.

இம்முறை பாடசாலை ஊடாக 4 இலட்சத்து 7 ஆயிரத்து 129 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

அதேபோன்று ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அதற்கமைய இம்முறை ஒட்டுமொத்தமாக 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதற்காக நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களும், 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டு பரீட்சைகள் தொடங்கியுள்ளன.