பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (ஜூன் 01) முதல் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று, (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் இந்த நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.
இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட சவேந்திர சில்வா அவர்கள், இன்று (31) இராணுவத் தளபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.