வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் பிரிவில் சகோதர முறையான நொங்கு வியாபாரம் செய்யும் இருவருக்கிடையில் நேற்றிரவு (24) ஏற்பட்ட கைகலப்பில் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகி ஒருவர் பலியானார்.
பலியானவர் அக்கரைப்பற்று இத்தியடிப்பிரதேசத்தில் வசித்துவந்த 3 பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய கு.குணதாஸ் என அடையாளம் காணப்பட்டார்.
சம்பவத்தில் காயமடைந்த மரணத்துடன் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் 36 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்புடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மரணத்துடன் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் 36 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்புடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பலியானவரின் சடலம் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது . இரு சகோதார முறையானவர்களும் பனை நொங்கு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றவர்கள் என்பதுடன் இருவருக்குமிடையில் இதுபோன்ற கைகலப்பும் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் பலத்த சண்டையில் ஈடுபட்டுள்ளதுடன் கூரிய கோடரி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி யும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போதே பலியானவரின் கழுத்திலும் தலையின் நெற்றி பகுதியிலும் கோடரியினால் தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையினுடாக அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பயனின்றி மரணமடைந்தார்.
இது தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்று பெருங்குற்றத்தடுப்பு பொலிசார் மற்றும் அம்பாரை விசேட தடயவியல் பொலிசார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.