மறு அறிவித்தல் வரை எரிவாயு சிலிண்டர்களுக்காகக் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
திட்டமிட்டபடி இன்று எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாது போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் காணப்பட்ட சீரற்ற வானிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, எரிவாயு விநியோகம் தாமதமடையும் எனவும், மறு அறிவித்தல் வரை வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சமையல் எரிவாயு அடங்கிய மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
இதன்படி, 3 ஆயிரத்து 700 மெற்றிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய தினம் வருகை தந்த கப்பலுக்கும், இன்று வரவுள்ள கப்பலுக்கும் ஏற்கனவே கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
