எந்தவொரு நபரும் தனது கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தாள்களின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற, அதன் நாணயக் கொள்கை தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
அந்நியச் செலாவணிச்சட்டத்தின் கீழ், தற்போது நபர் ஒருவர் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கக் கூடிய உச்ச வரம்பாக 15,000 டொலர் பெறுமதி குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சட்டத்தின்கீழ் வெளிநாட்டு நாணயம் எவ்வாறு தனக்கு கிடைக்கப் பெற்றது என்பதை அந்நபர் விளக்கமளிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
