வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பல்வேறு சமய சமூக பணிகளில் ஈடுபட்டுவருவடன் அமைப்பின் உறுப்பினர்கள் தன்னார்வ தொண்டர்களாக இணைந்து முன்னின்று செயற்பட்டும் வருகின்றனர்.
குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் ஆலயங்களில் இடம்பெறும் சிரமதானப்பணிகளில் கலந்து கொண்டு அவர்களது பங்களிப்பை வழங்குவதுடன் அன்னதானம் தாகசாந்தி போன்ற பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இதேநேரம் கடந்த கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கான நிவாரணப்பணி வழங்கும் பணிகளிலும் தொண்டர்களாக இருந்து உதவி புரிந்தனர்.
மரண வீடுகளுக்கும் இலவசமாக பந்தல் மற்றும் கதிரை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தல் வருமானம் குறைந்த குடும்பங்களின் வீடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு இலவசமாக சமைத்துக்கொடுத்தல் போன்ற நற்காரியங்களிலும் முன்னின்று பணியாற்றுகின்றனர்.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெறவுள்ள மகோற்சவத்தை முன்னிட்டு ஆலய நிருவாக சபையின் வேண்டுகோளில் பேரில் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையில் சிரமதானப்பணிகளில் இன்று ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆலய வெளிவளாகத்தை துப்பரவு செய்து அங்கிருந்து அகற்றியதுடன் வடிகானையும் சுத்தப்படுத்தினர்.
அத்தோடு பற்றைகள் யாவும் வெட்டி அகற்றப்பட்டதுடன் ஆலய வெளிவாளகத்தில் அமையவுள்ள தற்காலிக சிறிய மடம் ஒன்றினை அமைக்கும் செயற்பாடுகளில் ஆலய நிருவாகத்தினரோடு இணைந்து வழி நடத்தினர்.
இவ்வாறான சமய சமூக பணிகளில் ஈடுபடும் குறித்த அமைப்பினருக்கு ஆலய நிருவாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.



