வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஸ்தாபகரும் காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் மானசீக சீடருமான சற்குருநாதர் ராம்ஜி சுவாமிகள் மலேசியாவில் இன்று இறைவனுடன் இரண்டறக்கலந்து சமாதியடைந்;தார்.
சுவாமிகள் சமாதியடைந்ததை முன்னிட்டு அவரது ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகள் அக்கரைப்பற்று வாச்சிக்குடா ஸ்ரீ இராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் குருதேவர் பீடத்தில் இன்று நடைபெற்றது.
ஆலய பரிபாலகர் நல்லதம்பி கந்தசாமியின் தலைமையில் இன்று இடம்பெற்ற ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளில் சுவாமியின் அடியவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது காயத்திரி மந்திரம் ஸ்ரீ இராம ஜெயம் போன்ற மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு சுவாமி ஜியின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இதேநேரம் சுவாமி ஜியின் இறுதி கிரியை நிகழ்வுகள் மலேசியாவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் இதனை பார்வையிட்ட பக்தர்கள் கண்ணீர் மல்க சுவாமிக்கு விடைகொடுத்தனர்.
சுவாமியின் அஸ்தி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதுடன் ஆஞ்சநேயர் ஆலயத்தின் சமாதி அமைக்கப்பட்டு விசேட வழிபாடுகள் விரைவில் இடம்பெறும் என ஆலய பரிபாலகர் நல்லதம்பி கந்தசாமி பக்தர்கள் முன்னிலையில் கூறினார்.