வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (18) மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு களுதாவளையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூஜை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் கே.வினோ ராஜ் மற்றும் வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூஜையில் கலந்து கொண்டனர்.
அத்துடன் சிவா மற்றும் நிசான் அவர்களின் அனுசரணையுடன் ஆலயத்தில் அன்னதானமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
