65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் வழங்க இந்தியா இணக்கம்!!


65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளது.

தற்போதுள்ள கடன் வசதிகளின் கீழ் இந்த உதவியை வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான யூரியா உரமே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.