மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு வௌிநாடு செல்லத்தடை!!


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஸ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.