நுகர்வோர் விவகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை!!


அனைத்து உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இப்போது தங்கள் வசம் உள்ள பொருட்களுக்கான பில், விலைப்பட்டியல் வைத்திருக்க வேண்டும் என்று நுகர்வோர் விவகார சபை (CAA) அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு இன்று (ஏப்ரல் 27) முதல் உடன் அமுலுக்கு வருகிறது.

விலைப்பட்டியல்(Bills) விநியோகிஸ்தரின் பெயர் மற்றும் முகவரி, வாங்கிய திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் ஏதேனும் குறிப்பிட வேண்டும்.