பொன்.நவநீதன்
அரசியல் ரீதியாக கருத்துகளை எதிர்கொள்ளமுடியாத பிள்ளையான் குழுவினரின் அட்டகாசம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றது.
நல்லாட்சிக்காலத்தில் அடங்கியிருந்த பிள்ளையான் குழுவினர் கோத்தபாயராஜபகஸ ஆட்சியதிகாரத்திற்கு வருகைதந்த நிலையில் தமது அட்டகாசத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் பிள்ளையானின் செயலாளராகவுள்ள பிரசாந்தன் தலைமையிலான குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுவருவதாக அப்பகுதியில் உள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது கட்சிக்கு எதிரான கட்சிகளுடன் இணைந்து பயணிப்பவர்களையும் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட அட்டகாசங்களை பேசுவர்களையும் இலக்கு வைக்கும் நிகழ்வுகள் நடைபெறுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இரவு வேளைகளில் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தப்படுவதுடன் சிலர் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறையிட்டால் சுடப்படுவீர்கள் என்று அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இது தொடர்பில் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசென்றாலும் கவனத்தில் கொள்ளாமல் பிள்ளையான் குழுவினருக்கு சார்பாக செயற்படும் நிலையுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.