அமெரிக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தமது முகம் தெரியாதவாறு முகக்கவசம் ஒன்றை அணிந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், புரூக்ளின் சுரங்கப்பாதை பகுதியில் பல வெடிக்காத வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.